சாம்சன், ஸ்மித் அரைசதம்: ராஜஸ்தான் ரன் குவிப்பு

தினமலர்  தினமலர்
சாம்சன், ஸ்மித் அரைசதம்: ராஜஸ்தான் ரன் குவிப்பு

சார்ஜா: சென்னை அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் கடந்து கைகொடுக்க ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 216 ரன்கள் குவித்தது.


ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. சார்ஜாவில் நடக்கும் லீக் போட்டியில் தோனியின் சென்னை அணி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தானை எதிர்கொண்டது.

சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாத் அறிமுகமானார். ராஜஸ்தான் அணியில் 19 வயதுக்குட்பட்ட உலக கோப்பை தொடர் நாயகன் இந்திய வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுக வாய்ப்பு பெற்றார். 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, பவுலிங் தேர்வு செய்தார்.


ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சன் (74), கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (69) கைகொடுக்க, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்தது. ஆர்ச்சர் (27), டாம் கரான் (10) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை அணி சார்பில் சாம் கரான் 3 விக்கெட் வீழ்த்தினார்.

மூலக்கதை