அதிர்ச்சி! பருவமழை இல்லாததால் பயிர் முளைப்பு திறன்... சிறு தானியங்களால் விவசாயிகள்

தினமலர்  தினமலர்
அதிர்ச்சி! பருவமழை இல்லாததால் பயிர் முளைப்பு திறன்... சிறு தானியங்களால் விவசாயிகள்

இப்பகுதி மானாவாரி நிலங்களில் விவசாயிகள் இந்தாண்டு குதிரைவாலி, வரகு உள்ளிட்ட தானிய பயிர்களை அதிகம் பயிரிட்டுள்ளனர்.

வேளாண்மைத் துறையின் கீழ் வழங்கப்பட்ட குதிரைவாலி விதைகளை துரைச்சாமிபுரம் புதுார், திம்மநத்தம், பாப்பாபட்டியில் பயிரிட்டுள்ளனர். அல்லிகுண்டம், மானுாத்து, பாரைப்பட்டி, ஜோதில்நாயக்கனூரில் பரவலாக தனியார்களிடம் இருந்து வாங்கிய வரகு விதை பெற்று பயிரிட்டுள்ளனர்.விதைகள் முளைக்கும் பருவத்தில் போதிய மழை இல்லாததால் தானியங்களின் விளைச்சல் திறன் குறைந்துள்ளது.

இதனால் மாற்றுப் பயிர் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.துரைசாமிபுரம்புதுார் மூக்கன் கூறுகையில், ''வேளாண்மை துறையினரிடம் குதிரைவாலி விதைகள் வாங்கி ஆறு ஏக்கரில் பயிரிட்டுள்ளேன். போதிய அளவு பயிர்கள் முளைக்கவில்லை,'' என்றார்.வேளாண் அதிகாரிகள் கூறுகையில், 'உசிலம்பட்டி வடக்கு பகுதியில் குதிரைவாலி, தெற்கு பகுதியில் வரகு ஆகிய தானியங்களில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கணக்கெடுத்து உயர்அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்,' என்றனர்

உசிலம்பட்டி பகுதியில் ஆடிப்பட்டத்தில் பயிரிடப்பட்ட குதிரைவாலி, வரகு தானியப் பயிர்கள் போதிய முளைப்புத்திறன் இல்லாமல் போனதால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

மூலக்கதை