அம்பயர் மீது தோனி கோபம் | செப்டம்பர் 22, 2020

தினமலர்  தினமலர்
அம்பயர் மீது தோனி கோபம் | செப்டம்பர் 22, 2020

சார்ஜா: சென்னை அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சகார் வீசிய 18வது ஓவரின் 5வது பந்தை டாம் கரான் (ராஜஸ்தான்) அடித்தார். இதனை தோனி பிடித்ததாக நினைத்த,அம்பயர்சம்சுதின்அவசரப்பட்டு‘அவுட்’ வழங்கினார். பின் லெக் அம்பயர் வினீத் குல்கர்னியிடம் ஆலோசித்த சம்சுதின், ‘டிவி’ அம்பயரிடம் ‘ரிவியூ’ கேட்டார். அவுட் கொடுத்து விட்டு முடிவை மாற்றியது குறித்து அம்பயர் சம்சுதினிடம் கோபமாக பேசினார் தோனி.‘ரீப்ளே’வில், பந்து டாம் கரானின் தொடையில்தான்பட்டுச் சென்றது.தோனி பிடிப்பதற்கு முன் பந்து‘பவுன்ஸ்’ ஆனதும் தெரிய வந்தது. இதனால் டாம் கரான் தப்பினார்

கடந்த முறை இதே ராஜஸ்தானுக்கு எதிராக ‘நோ–பால்’ தொடர்பாக, களத்திற்கு வெளியே இருந்து மைதானத்தில் நுழைந்து அம்பயரிடம் வாக்குவாதம் செய்தார் தோனி.

தோனி சிக்சர்

நேற்று டாம் கரான் வீசிய கடைசி ஓவரில் தோனி ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்து ரசிகர்களுக்கு ஆறுதல் தந்தார். இதில் இரண்டாவதாக அடித்த சிக்சர், மைதானத்தை தாண்டிச் சென்று சாலையை கடந்து எதிர்புறம் விழுந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

 

 

 

மூலக்கதை