7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை

தினமலர்  தினமலர்
7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை


கொரோனா தடுப்புக்காக மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சிகிச்சை, சுகாதார வசதி ஆகியவை குறித்து பாதிப்பு அதிகம் உள்ள மஹாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, உ.பி., டில்லி, பஞ்சாப் ஆகிய ஏழு மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.ஆலோசனையில் மாநிலங்களின் முதல்வர்களுடன் சுகாதார அமைச்சர்களும்பங்கேற்க உள்ளனர். நாடு முழுதும் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் இந்த ஏழு மாநிலங்களின் பங்கு
மட்டும் 65 சதவீதம். அதேபோல் மொத்த பலி எண்ணிக்கையில் இந்த ஏழு மாநிலங்களின் பங்கு 77 சதவீதம்.

மூலக்கதை