ஐதராபாத்தை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐதராபாத்தை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி

துபாய்: ஐபிஎல் 13வது சீசனின் மூன்றாவது போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ேநற்று நடைபெற்றது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்  முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. அடுத்து ஐதராபாத் அணி சார்பில் கேப்டன் வார்னரும், பேர்ஸ்டோவ்வும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

வார்னர் 6 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், பேர்ஸ்டோவ்வும், மனிஷ்  பாண்டேவும் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர்.
மணிஷ் பாண்டே 33 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுபுறம் பேர்ஸ்டோவ் நிதானமாக ஆடினார்.

அவரும் 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் ஒற்றை இலக்க  ரன்களில் தொடர்ச்சியாக ஆட்டமிழந்தனர்.

19. 4 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்து ஐதராபாத் அணி தோல்வியைத் தழுவியது.

பெங்களூரு அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய சாஹல், 4 ஓவரில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

.

மூலக்கதை