சிஎஸ்கே வெற்றி கூட்டணி தொடருமா?: இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சிஎஸ்கே வெற்றி கூட்டணி தொடருமா?: இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதல்

ஷார்ஜா: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி, ஷார்ஜா மைதானத்தில் இன்று இரவு 7. 30 மணிக்கு தொடங்குகிறது.

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்திய  உற்சாகத்துடன் சிஎஸ்கே இந்தப் போட்டியில் களம் காண்கிறது. 2008ல் ஷேன் வார்னே தலைமையில் ஐபிஎல் கோப்பையை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்றது.

அதன் பின்பு அந்த அணி ஐபிஎல் தொடர்களில் பெரியளவில் சோபிக்கவில்லை.

கடந்த 2019 ஐபிஎல் தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளிகள் பட்டியலில் 8ம் இடத்தை பிடித்தது. இதனால் சிஎஸ்கேவுடனான முதல் போட்டியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற  இலக்கில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளது.

முதல் போட்டியில் வெற்றிபெற்றதால் சிஎஸ்கே அணியில் பெரியளவில் மாற்றம் இல்லை.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச அணியில், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), யஷ்சாஸ்வி ஜெய்ஸ்வால், ராபின் உத்தப்பா, ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்) உள்ளிட்ட வீரர்கள் இடம்பெறுவர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச அணியில், ஷேன் வாட்சன், முரளி விஜய், டூப்ளசிஸ், அம்பத்தி ராயுடு, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், தீபக் சஹார், பியூஷ் சாவ்லா, லுங்கி என்கிடி ஆகிய  வீரர்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.

.

மூலக்கதை