சுமார் 120 கோடி டோஸ்கள் அளவிற்கு ஸ்பூட்னிக்- 5 கொரோனா தடுப்பூசிகளை வாங்க 10 நாடுகள் ரஷியாவுடன் ஒப்பந்தம்!!

தினகரன்  தினகரன்
சுமார் 120 கோடி டோஸ்கள் அளவிற்கு ஸ்பூட்னிக் 5 கொரோனா தடுப்பூசிகளை வாங்க 10 நாடுகள் ரஷியாவுடன் ஒப்பந்தம்!!

மாஸ்கோ : ரஷியா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை கொள்முதல் செய்ய பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.முதன்முறையாக ரஷியா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தான ஸ்பூட்னிக் 5 மீது முதலில் உலக நாடுகள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும் மனம் தளராத ரஷியா, 3 ம் கட்ட ஆய்வுகளுடன் தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகளையும் தீவிரப்படுத்தி வந்தது. கொரோனாவுக்கு எதிராக வேற மருந்துகள் இதுவரை வெளியாகாத நிலையில், தற்போது பல்வேறு நாடுகள் ரஷியாவின் ஸ்பூட்னிக் 5 மீது கவனத்தை திருப்பி இருக்கின்றனர். மத்திய கிழக்கு நாடுகள், தென் அமெரிக்கா மற்றும் ஆசிய முழுவதிலும் உள்ள 10க்கும் மேற்பட்ட நாடுகளுடன் ரஷியா பூர்வாங்க ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்தியா, சவூதி அரேபியா, மெக்சிகோ, பிரேசில் உள்ள நாடுகளில் தடுப்பூசி வழங்குவதற்கான ஆர்டர்களை ரஷியா  ஸ்ட்ரீட் ஜர்னல் இதழ் தெரிவித்துள்ளது. சுமார் 120 கோடி டோஸ்கள் அளவிற்கு ஸ்பூட்னிக் 5 தடுப்பூசிகளை வாங்க ரஷியா ஆர்டர்களை பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஸ்பூட்னிக்  5 தடுப்பு மருந்தின் இறுதி கட்ட சோதனைகளை மேற்கொளளவும் 10 கோடி டோஸ்களை விநியோகம் செய்யவும் டாக்டர்ஸ் ரெட்டிஸ் லேப் ரஷியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை