மாநிலங்களவையில் மைக் உடைப்பது போன்ற செயலிகளில் ஈடுபடுவது தவறானது :8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் தொடர்பாக வெங்கையா நாயுடு விளக்கம்

தினகரன்  தினகரன்
மாநிலங்களவையில் மைக் உடைப்பது போன்ற செயலிகளில் ஈடுபடுவது தவறானது :8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் தொடர்பாக வெங்கையா நாயுடு விளக்கம்

டெல்லி : கடந்த 20ம் தேதி மாநிலங்களவையில் 3 வேளாண் மசோதக்கள் தாக்கல் செய்யப்பட்டதை எதிர்த்து, அவை துணை தலைவர் ஹரிவன்ஷ் இருக்கையை முற்றுகையிட்டு 8 எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இது குறித்து ஹரிவன்ஷ் அளித்த புகாரின் பேரில், அமளியில் ஈடுபட்ட எம்பிக்களை சஸ்பெண்ட் செய்து குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார். இதற்கிடையே, சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து 8 எம்.பிக்களும் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த நிலையில், 8 எம்.பிக்கள் மீதான வாபஸை திரும்பப்பெறவில்லை என்றால் எதிர்க்கட்சிகள் மாநிலங்களவை கூட்டத்தொடரை புறக்கணிக்கும் என காங்கிரஸ் எம்.பி குலாம் அபி ஆசாத் அறிவித்தார். மேலும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு கீழே தனியார் யாரும் கொள்முதல் செய்யக்கூடாது என மத்திய அரசு மற்றொரு மசோதா கொண்டு வரவேண்டும் என்று கூறிய குலாம் நபி ஆசாத்மத்திய அரசு இவ்வாறு செய்யவில்லையென்றால் எதிர்கட்சிகள் நாடாளுமன்ற கூட்டத் தொடரை புறக்கணிக்கும் என எச்சரித்தார். இருப்பினும், 8 எம்.பிக்கள் மீதான சஸ்பெண்டை திரும்பப்பெற வெங்கையா நாயுடு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் வெங்கையா நாயுடு பேசியதாவது, \'எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுப்பது இது முதன் முறையல்ல. மாநிலங்களவை மாண்பை அவமதிக்கும் வகையில் அவர்கள் நடந்து கொண்டனர். எதிர்கட்சிகளுக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உரிமை உள்ளது. எம்பிக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையானது அவர்களின் செயலுக்கு எதிரானதே தவிர அவர்களுக்கு எதிரானது அல்ல. ஜனநாயகம் என்பது விவாதத்தில் பங்கேற்பது தானே தவிர அவை அலுவல்களை முடக்குவது அல்ல. சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் தங்கள் செயலை நியாயப்படுத்தி பேட்டி அளிப்பது சரியல்ல. மாநிலங்களவையில் மைக் உடைப்பது போன்ற செயலிகளில் ஈடுபடுவது தவறானது,\' என்றார். இதையடுத்து, மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்களின் உத்தரவை திரும்ப பெற கோரி அவையில் இருந்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

மூலக்கதை