விமான தளங்களை இரட்டிப்பாக்கிய சீனா

தினமலர்  தினமலர்
விமான தளங்களை இரட்டிப்பாக்கிய சீனா

புதுடில்லி: கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய - சீன எல்லைப்பகுதியில் சீனா தனது விமான போக்குவரத்திற்கான தளங்களை இரடிப்பாக்கியுள்ளது.



உலகளாவிய புவிசார் அரசியல் புலனாய்வு தளமான ஸ்ட்ராட்போரின் மூத்த ஆய்வாளர் சிம் டாக் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பூட்டானின் ஒரு பகுதியில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே, 2017ம் ஆண்டு ஏற்பட்ட டோக்லாம் நெருக்கடி, சீனாவின் நோக்கங்களை மாற்றியதாகத் தெரிகிறது. சீனா அதன் மொத்த விமான தளங்கள், வான் பாதுகாப்பு நிலைகள் மற்றும் ஹெலிபோர்டுகளின் எண்ணிக்கையை கடந்த மூன்று ஆண்டுகளில் இரட்டிப்பாக்குவதை விட அதிகமாக்கி உள்ளது. இந்த ராணுவ விரிவாக்கத்தில் விமான தளங்கள், மின்னணு போர் வசதிகள், ஹெலிபோர்ட்ஸ் மற்றும் வான் பாதுகாப்பு தளங்களை சீனா அமைத்துள்ளது.


நடந்துகொண்டிருக்கும் லடாக் நிலைப்பாட்டிற்கு சற்று முன்னரே, இந்தியாவின் எல்லையில் சீன ராணுவ வசதிகளை கட்டியெழுப்பிவிட்டது. சீனா தனது எல்லைப் பகுதிகள் மீது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் மிகப் பெரிய முயற்சியின் ஒரு பகுதியாக இதைக் கருத வேண்டியுள்ளது. சீனா தனது ராணுவ உள்கட்டமைப்பின் விரிவாக்கம் மற்றும் கட்டுமானத்தை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மூலக்கதை