தமிழ்நாட்டிற்கு கெடுதல் எதுவும் செய்ய மாட்டேன் என பிரதமர் மோடி உறுதி அளித்தார் : திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேட்டி!!

தினகரன்  தினகரன்
தமிழ்நாட்டிற்கு கெடுதல் எதுவும் செய்ய மாட்டேன் என பிரதமர் மோடி உறுதி அளித்தார் : திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேட்டி!!

டெல்லி: காவிரியின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில், 9000 கோடி ரூபாய்க்கு புதிய அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதே சமயம் இந்த விவகாரத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திட்ட அனுமதிக்கு எந்தவிதமான ஒப்புதலும் அளிக்கவில்லை. இதை தொடர்ந்து மத்திய அரசிடம் மேகதாது அணைக்கட்ட அனுமதி கேட்க கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையிலான குழு கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தது.இந்த நிலையில், காவிரி, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடியுடன் டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்ட திமுக எம்.பி.க்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது மேகதாதுவில் அணைக்கட்ட எதிர்ப்பு தெரிவித்து பிரதமரிடம் திமுக எம்.பி.க்கள். மனு அளித்துள்ளனர். பின்னர் திமுக எம்.பிக்கள் பிரதமரை சந்தித்தது ஏன் என நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.அப்போது பேசிய அவர், மேகதாது அணையை கட்ட கர்நாடாகவுக்கு அனுமதி தர கூடாது என திமுக தலைவர் ஸ்டாலினின் கடிதத்தை பிரதமர் மோடியிடம் கொடுத்துள்ளோம், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்க கூடாது என பிரதமரிடம் வலியுறுத்தினோம். மேகதாது அணையை கட்டக்கூடாது என பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி இதுவரை வலியுறுத்தவில்லை. மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு பாதகமாக எந்த முடிவும் எடுக்க மாட்டேன் என பிரதமர் மோடி கூறினார்.தான் கூறியதையும் திமுக தலைவர் ஸ்டாலினிடம் தெரிவிக்குமாறும் பிரதமர் மோடி கூறினார்.\' என டி.ஆர்.பாலு தெரிவித்தார். 

மூலக்கதை