முல்லைப் பெரியாறு அணையின் துணைக் குழுவை கலைக்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!!

தினகரன்  தினகரன்
முல்லைப் பெரியாறு அணையின் துணைக் குழுவை கலைக்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!!

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணையை கண்கானிக்கும் விதமாக உருவாகப்பட்ட துணைக் குழுவை கலைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.கேரளாவை சார்ந்த ஜோசப் என்பவர் கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,\' முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்கும் விதமாக தான் பிரதான கண்கானிப்பு குழு உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது துணை குழுவும் ஒன்று கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளதால் கண்கானிப்பு குழுவுக்கான அதிகாரங்கள் பிரித்து கொடுக்கப்படுகிறது. அதனால் துணைக் குழுவை கலைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது.இதையடுத்து கடந்த 9ம் தேதி மனு விசாரணைக்கு வந்தபோது, இதே வழக்கில் எனது சகோதரர் வழக்கறிஞராக ஆஜராகி வாதங்களை மேற்கொண்டதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே வழக்கில் இருந்து தாமாக முன்வந்து விலகிக் கொண்டார். இதையடுத்து மேற்கண்ட வழக்கை புதிய அமர்வு விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமண், நவீன் சின்கா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.இதையடுத்து உத்தரவில்,\' முல்லைப் பெரியாறு அணையை கண்கானிக்கும் விதமாக உருவாக்கப்பட்ட துணைக் குழுவை கலைக்ககோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்புகிறது. மேலும் அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என ரசூல் ராய் என்பவர் முன்னதாக தொடர்ந்துள்ள வழக்கோடு, இந்த புதிய மனுவும் இணைத்து விசாரிக்கப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மூலக்கதை