பி.சி.சி.ஐ., பாரபட்சம் * ஐ.பி.எல்., உரிமையாளர்கள் எதிர்ப்பு | செப்டம்பர் 21, 2020

தினமலர்  தினமலர்
பி.சி.சி.ஐ., பாரபட்சம் * ஐ.பி.எல்., உரிமையாளர்கள் எதிர்ப்பு | செப்டம்பர் 21, 2020

துபாய்: அன்னிய வீரர்களுக்கு பி.சி.சி.ஐ., சலுகை காட்டுவதாக, ஐ.பி.எல்., அணி உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஐ.பி.எல்., தொடருக்காக எமிரேட்ஸ் சென்ற அனைத்து அணி வீரர்களும் 6 நாட்கள் தனிமைப்படுத்தப் பட்டனர். அதேநேரம், இங்கிலாந்தில் இருந்து வந்த ஸ்டீவ் ஸ்மித், ஜோர்டன், ஆர்ச்சர் உள்ளிட்ட 21 வீரர்கள் 36 மணி நேரம் மட்டும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டால் போதுமானது என சலுகை தரப்பட்டது.

இதையும் சரியாக கடைபிடிக்கவில்லை. சென்னை அணியின் சாம் கரான், 4 மணி நேரத்தில் அணியுடன் இணைந்தார்.

இவ்விஷயத்தில் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) பாரபட்சம் காட்டுவதாக அணி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் தரப்பில் கூறுகையில்,‘‘அதிக செலவு செய்து பாதுகாப்பு வளையத்தை உருவாக்கியுள்ளோம். சென்னை அணியின் ஹேசல்வுட், சாம் கரான் இங்கிலாந்தில் வந்த வேகத்தில், அபுதாபிக்கு 2 மணி நேரம் பஸ்சில் சென்றனர். இவர்களுக்கு ஏதாவது பாதிப்பு என்றால் அனைவருக்கும் ‘ரிஸ்க்’ தான். இவ்விஷயத்தில் பி.சி.சி.ஐ., இரட்டை வேடம் போடுகிறது. தனிமைப்படுத்துதல் விதி எல்லோருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும். ஒருவேளை அந்த 21 வீரர்கள் முக்கியம் என்றால், தொடரை இன்னும் 3 நாட்களுக்கு தள்ளி வைத்திருக்கலாம். போட்டியில் வெற்றி தோல்வியை விட, வீரர்கள் உடல்நலன் மிக முக்கியம்,’ என்றனர்.

மூலக்கதை