பேரவையில் தனக்கு நோ்ந்த அவமதிப்புக்கு எதிராக ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம்; மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
பேரவையில் தனக்கு நோ்ந்த அவமதிப்புக்கு எதிராக ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம்; மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அறிவிப்பு

டெல்லி: அவையில் தனக்கு நோ்ந்த அவமதிப்புக்கு எதிராக ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் இருக்கப்போவதாக மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அறிவித்துள்ளார். மேலும் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் இருக்கப்போவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். பாராளுமன்ற மாநிலங்களவையில் வேளாண் மசோதா நிறைவேற்றப்பட்ட போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் துணைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவை விதிமுறைகளை மீறி நடந்துகொண்ட 8 எம்பிக்களை ஒருவாரம் சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார். இதற்கிடையே, சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து 8 எம்.பிக்களும் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ் இன்று காலை சந்தித்தார். அவர்களுக்காக டீ கொண்டு வந்தார். ஆனால் அவர் அளித்த டீயை ஏற்க எம்.பி.க்கள் மறுத்துவிட்டனர். இந்நிலையில், எதிர்க்கட்சி எம்பிக்கள் தன்னை அவமதித்ததைக் கண்டித்து மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

மூலக்கதை