நியூசிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு

தினமலர்  தினமலர்
நியூசிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு

விமான விபத்தில் பைலட் உயிரிழப்புபுதுடில்லி: உத்தர பிரதேசத்தின் அசாம்கர் மாவட்டத்தில் உள்ள வயல்வெளியில், நான்கு இருக்கைகளைக் கொண்ட, சிறிய வகை பயிற்சி விமானம் ஒன்று, நேற்று முன்தினம் விழுந்து நொறுங்கியது. இரவு, 11:30 மணிக்கு ஏற்பட்ட இந்த விபத்தில், விமானத்தை தனியாக இயக்கிய 'பைலட்' சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஐகோர்ட் உத்தரவு நிறுத்திவைப்புபுதுடில்லி: உத்தர பிரதேச முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரசாத் பிரஜாபதி, 2017ல், கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில், இவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, லக்னோ உயர்நீதிமன்றம், அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது. இதை எதிர்த்து, மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜாமின் உத்தரவை நிறுத்திவைத்தது.

46 மாவட்டங்களில் நக்சல் வன்முறை புதுடில்லி: நாட்டின், 11 மாநிலங்களில் உள்ள, 90 மாவட்டங்கள், நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன. இதில், கடந்த ஆண்டு, 61 மாவட்டங்களில், வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இந்த ஆண்டின் முதல் பாதியில், 46 மாவட்டங்களில் மட்டுமே, வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இவற்றில், 963 பேர் உயிரிழந்துள்ளனர், ராஜ்யசபாவில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி நேற்று தெரிவித்தார்.

பத்திரிகையாளர் காவல் நீட்டிப்புபுதுடில்லி: சீன உளவுத்துறைக்கு, நம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை வெளியிட்ட வழக்கில், பத்திரிகையாளர் ராஜிவ் சர்மா, கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவருடன், சீன பெண் ஒருவரும், நேபாள நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இது தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த டில்லி பெருநகர மாஜிஸ்திரேட், ராஜிவ் சர்மாவின் காவலை, ஏழு நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டார்.

ஒரு லட்சம் காலி பணியிடங்கள்புதுடில்லி: சி.ஏ.பி.எப்., எனப்படும், மத்திய ஆயுத காவல் படைகளில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. இதன்கீழ் வரும், பி.எஸ்.எப்., பிரிவில், அதிகபட்சமாக, 28 ஆயிரத்து, 926 இடங்கள் காலியாக உள்ளன. சி.ஆர்.பி.எப்., பிரிவில், 26 ஆயிரத்து, 506; சி.ஐ.எஸ்.எப்., பிரிவில், 23 ஆயிரத்து, 906; எஸ்.எஸ்.பி., பிரிவில், 18 ஆயிரத்து, 643; ஐ.டி.பி.பி., பிரிவில், 5,784 இடங்கள் காலியாக உள்ளதாக. மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, ராஜ்யசபாவில் நேற்று தெரிவித்தார்.''இந்தியாவில், 2017 மற்றும், 2018ம் ஆண்டுகளில், என்.எஸ்.ஏ., எனப்படும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ், 1,200 பேரை, போலீசார் கைது செய்தனர். இதில், 563 பேர், இன்றுவரை, போலீஸ் காவலில் உள்ளனர். அதிகபட்சமாக, மத்திய பிரதேசத்தில், 795 பேர், இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்,'' என்றும் கிஷன் ரெட்டி, தெரிவித்தார்.எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்புடேராடூன்: உத்தரகண்டின் கேதார்நாத் கோவிலுக்கு அருகே, போலீசாரும், மாநில பேரிடர் மீட்புப் படையினரும், நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு, நான்கு பேரின் எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இவை, 2013ல் நடந்த பேரழிவின்போது உயிரிழந்தோரின் எலும்புக் கூடுகளாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து, ஹிந்து முறைப்படி, அவர்களின் எலும்புக் கூடுகள் தகனம் செய்யப்பட்டன.ஒரு லட்சம் காலி பணியிடங்கள்புதுடில்லி: சி.ஏ.பி.எப்., எனப்படும், மத்திய ஆயுத காவல் படைகளில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. இதன்கீழ் வரும், பி.எஸ்.எப்., பிரிவில், அதிகபட்சமாக, 28 ஆயிரத்து, 926 இடங்கள் காலியாக உள்ளன. சி.ஆர்.பி.எப்., பிரிவில், 26 ஆயிரத்து, 506; சி.ஐ.எஸ்.எப்., பிரிவில், 23 ஆயிரத்து, 906; எஸ்.எஸ்.பி., பிரிவில், 18 ஆயிரத்து, 643; ஐ.டி.பி.பி., பிரிவில், 5,784 இடங்கள் காலியாக உள்ளதாக. மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, ராஜ்யசபாவில் நேற்று தெரிவித்தார்.என்.எஸ்.ஏ., கீழ் 1,200 பேர் கைதுபுதுடில்லி: இந்தியாவில், 2017 மற்றும், 2018ம் ஆண்டுகளில், என்.எஸ்.ஏ., எனப்படும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ், 1,200 பேரை, போலீசார் கைது செய்தனர். இதில், 563 பேர், இன்றுவரை, போலீஸ் காவலில் உள்ளனர். அதிகபட்சமாக, மத்திய பிரதேசத்தில், 795 பேர், இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, ராஜ்யசபாவில் நேற்று தெரிவித்தார்.கீர்த்தி சக்கரா விருது ஒப்படைப்புசிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த அனில் சவுஹான் என்ற ராணுவ வீரர், 18 ஆண்டுகளுக்கு முன் வீரமரணமடைந்தார். இதையடுத்து, அவரின் குடும்பத்திற்கு, கீர்த்தி சக்கரா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிலையில், தன் மகனின் தியாகத்தை, அதன் பின் வந்த மாநில அரசுகள் கவுரவிக்காததால், அவரின் தாய், தன் மகனுக்கு வழங்கப்பட்ட கீர்த்தி சக்கரா விருதை, கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயாவிடம் நேற்று திரும்ப ஒப்படைத்தார்.

மூலக்கதை