கொரோனா கட்டுப்பாட்டை மீறினால் 13,000 டாலர் அபராதம்: போரிஸ் ஜான்சன் உத்தரவு

தினமலர்  தினமலர்
கொரோனா கட்டுப்பாட்டை மீறினால் 13,000 டாலர் அபராதம்: போரிஸ் ஜான்சன் உத்தரவு

லண்டன்: 'இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களுக்கு 13,000 டாலர் வரை அபராதம் விதிக்கப்படும்' என, பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.பிரிட்டனில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
'ஆரம்பம் முதலே கொரோனா வைரசை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அலட்சியம் செய்து வந்தார். அவரது அலட்சியத்தால் தான் அதிக பாதிப்புகளை பிரிட்டன் சந்தித்துள்ளது. பாதிப்பு அதிகமாக இருந்த செப்., மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன. கொரோனா வைரசைத் தடுக்கும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தோல்வி அடைந்துவிட்டார்' என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.


இந்நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், ''பிரிட்டன் இந்த வாரம் கொரோனா பரவலின் இரண்டாம் கட்டத்தை எதிர் கொள்ளும் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே கொரோனா பரவலை தடுக்க சரியான வழி விதிமுறைகளை கடைபிடித்தாக வேண்டும். தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 13,000 டாலர் வரை அபராதம் விதிக்கப்படும்,'' எனத் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை