அமெரிக்க அதிபர் டிரம்புக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது :அமெரிக்க புலனாய்வு துறை அதிரடி

தினகரன்  தினகரன்
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது :அமெரிக்க புலனாய்வு துறை அதிரடி

நியூயார்க் : அமெரிக்க அதிபர் டிரம்புக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய பெண்ணை அமெரிக்க புலனாய்வு துறை அதிரடியாக கைது செய்துள்ளது. அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகைக்கு சந்தேகத்திற்கிடமான கடிதம் ஒன்றை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். கனடாவிலிருந்து அனுப்பப்பட்டதாக முகவரியிட்ட அந்த கடிதத்தில், ரைசின் என்ற கொடிய விஷப்பொருள் தடவப்பட்டிருப்பதை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர். வெள்ளை மாளிகைக்கு அந்த கடிதம் சென்றடைவதற்கு முன்பாகவே, வழக்கமான சோதனையின்போது அந்த கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், டிரம்பை குறிவைத்து கடிதம் அனுப்பப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கனடா எல்லையில் பிடிபட்ட ஒரு பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடிதத்தை அனுப்பியது தெரியவந்தது. அதையடுத்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால், கைது செய்யப்பட்ட பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை. பாக்கெட்டில் ரைசின் என்ற விஷம் இருப்பதை உறுதிப்படுத்த இரண்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன் (எப்.பி.ஐ) மற்றும் ரகசிய சேவை பிரிவு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மூலக்கதை