3.12 கோடி பேர் பாதிப்பு.. 2.28 கோடி பேர் ஓகே : உலகளவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 9.65 லட்சத்தை தாண்டியது!!

தினகரன்  தினகரன்
3.12 கோடி பேர் பாதிப்பு.. 2.28 கோடி பேர் ஓகே : உலகளவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 9.65 லட்சத்தை தாண்டியது!!

ஜெனீவா:சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 12 லட்சமாக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3,12,30,103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 74,43,625 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 61,245 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 2,28,21,437 குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 9,65,041 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-அமெரிக்கா -7,004,768     இந்தியா - 5,485,612     பிரேசில் - 4,544,629     ரஷியா - 1,103,399கொலம்பியா - 765,076     பெரு - 762,865     மெக்சிகோ - 697,663தென் ஆப்பிரிக்கா - 661,211ஸ்பெயின் - 659,334அர்ஜெண்டினா - 5,77,338கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-அமெரிக்கா - 204,118பிரேசில் - 136,895இந்தியா - 87,909 மெக்சிகோ - 73,493     இங்கிலாந்து - 41,777     இத்தாலி - 35,707 பெரு - 31,369பிரான்ஸ் - 31,285     ஸ்பெயின் - 30,495     ஈரான் - 24,301 கொலம்பியா - 24,208 கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-அமெரிக்கா - 4,250,140இந்தியா - 4,392,650பிரேசில் - 3,851,227ரஷியா - 909,357கொலம்பியா - 633,199தென் ஆப்ரிக்கா - 590,071     பெரு - 607,837     மெக்சிகோ -499,302    

மூலக்கதை