தென் சீன கடல் பகுதியில் ராணுவ பயிற்சி: லடாக் பிரச்சனையை திசை திருப்ப முயற்சி

தினமலர்  தினமலர்
தென் சீன கடல் பகுதியில் ராணுவ பயிற்சி: லடாக் பிரச்சனையை திசை திருப்ப முயற்சி

பீஜிங்: லடாக் பிரச்சனையை திசை திருப்பும் வகையில், தென் சீன கடல் பகுதியில் சீன ராணுவ படைகள் போர்ப்பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.



லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த ஜூன் மாதம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், இந்திய வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனால், பதற்றம் ஏற்பட்டு இருதரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டன.இதனிடையே, பதற்றத்தை தணிக்க இருதரப்பிலும் ராணுவ அதிகாரிகள் தரப்பில் 5 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும் சீனா இன்னும் முழுமையாக படைகளை விலக்கிக் கொள்ளவில்லை. 'அடுத்தகட்ட பேச்சுவார்த்தை தொடர்பாகவும் சீன ராணுவத்திடம் இருந்து தகவல் வரவில்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இந்நிலையில், லடாக்கில் சீனாவின் அத்துமீறலால் உலக நாடுகள் அதிருப்தி அடைந்துள்ளன. அதனால், லடாக் பிரச்னையை உலகின் கவனத்தில் இருந்து திசை திருப்பும் வகையில் தென் சீன கடல் பகுதியில் சீன கடற்படையினர் தொடர்ந்து போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென் சீன கடல் எல்லையில் சீனாவுடன் ஜப்பான், வியட்நாம், தென்கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடல் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. ஆனால், 90 சதவீத கடல் பகுதி தங்களுக்கே சொந்தம் என, சீனா உரிமை கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை