துப்பாக்கிச் சூட்டில் மாணவி பலி

தினமலர்  தினமலர்
துப்பாக்கிச் சூட்டில் மாணவி பலி



டெர்ரி ஹவ்டி:அமெரிக்காவின் இண்டியானா மாகாணம், டெர்ரி ஹவ்டியில், இண்டியானா பல்லையில்படிக்கும், மாணவ, மாணவியர் சிலர், விருந்து ஒன்றில் பங்கேற்றனர். அப்போது, அங்கு ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், வேலன்டினா டெல்வா, 18 என்ற மாணவி இறந்தார். 2 மாணவர்கள் காயம் அடைந்தனர். சுட்ட நபரை, போலீசார் தேடி வருகின்றனர். இதேபோல், நியூயார்க் ரோச்செஸ்டர் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, விருந்து நடந்தது. இதில், நடந்த துப்பாக்கிச் சூட்டில், இரண்டு பேர் இறந்தனர்; 14 பேர் காயம் அடைந்தனர்.

மூலக்கதை