ஐபிஎல் 2020 டி20: சூப்பர் ஓவரில் பஞ்சாப்பை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி

தினகரன்  தினகரன்
ஐபிஎல் 2020 டி20: சூப்பர் ஓவரில் பஞ்சாப்பை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி

துபாய்: ஐபிஎல் 2020 சீசனின் 2-வது ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்கம் முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த போட்டி இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதையடுத்து, சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி 2 விக்கெட்டுக்கு 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி வீரர் ரபாடா சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட் வீழ்த்தினார். இதனையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதல் பந்தில் ரன் எடுக்கவில்லை. 2-வது பந்து- வைடு, 3-வது பந்தில்- 2 ரன் என 3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

மூலக்கதை