எம்.எஸ்.தோனி 100

தினகரன்  தினகரன்
எம்.எஸ்.தோனி 100

ஐபிஎல் டி20 தொடரின் 13வது சீசன் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. சிஎஸ்கே கேப்டனாக தோனி பெற்ற 100வது வெற்றி இது. ஐபிஎல் தொடரில் இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் கேப்டன் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. * கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வீட்டில் முடங்கியிருந்த வீரர்கள் பலர் எடை அதிகரித்து குண்டாகக் காட்சி அளிப்பது பற்றிய நகைச்சுவை மீம்ஸ், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மா, சவுரவ் திவாரி இருவரும் ரசிகர்களில் கேலி, கிண்டலுக்கு ஆளாகி உள்ளனர்.* ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நாளை சிஎஸ்கே அணியை எதிர்கொள்கிறது. இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருப்பதால், ராஜஸ்தான் அணிக்காக அவர் இப்போட்டியில் களமிறங்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. * வைரஸ் தொற்று இல்லாத ‘பயோ பபுள்’ எனப்படும் ஒரு பாதுகாப்பான சூழலில் இருந்து மற்றொன்றுக்கு மாறுவது என்பது மிகவும் சவாலான விஷயமாக இருக்கிறது என்று சன்ரைசர்ஸ் அணி கேப்டன் வார்னர் தெரிவித்துள்ளார்.* நடப்பு ஐபிஎல் சீசனில் சுழற்பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக சன்ரைசர்ஸ் ஆல் ரவுண்டர் ரஷித் கான் கூறியுள்ளார்.* இந்தியாவில் சச்சின், கோஹ்லியை விடவும் தோனி மிகப் பிரபலமானவராகிவிட்டார் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

மூலக்கதை