எதிர்கட்சிகளின் எதிர்ப்பை மீறி வேளாண் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்...!! மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம்

தினகரன்  தினகரன்
எதிர்கட்சிகளின் எதிர்ப்பை மீறி வேளாண் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்...!! மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம்

டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே வேளாண் திருத்த சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் 3 மசோதாக்களும் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இந்த வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வேளாண் மசோதாக்கள் இன்று  மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதக்களின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது எனவும் திரும்பப் பெற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தன. எதிர்கட்சிகள் கடும் அமளியிலும் ஈடுபட்டதால் அவை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் பிற்பகல் 1.42 மணிக்கு கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளிக்கு மத்தியில், குரல் வாக்கெடுப்பு மூலம் வேளாண் மசோதாக்கள்  மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. வேளாண் மசோதாக்கள் நிறைவேறிய நிலையில் மாநிலங்களவை நாளை காலை 9 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேளாண் மசோதாக்களுக்கு கண்டனம் தெரிவித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். வேளாண் மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பும் திருச்சி சிவாவின் கோரிக்கை நிராகரிக்கபட்டுள்ளது.

மூலக்கதை