ஆண்ட்ரியா நடிக்கும் ‘பிசாசு-2′..; இளையராஜா இல்லாமல் மிஷ்கின் படம்

FILMI STREET  FILMI STREET
ஆண்ட்ரியா நடிக்கும் ‘பிசாசு2′..; இளையராஜா இல்லாமல் மிஷ்கின் படம்

உதயநிதி நடித்த சைக்கோ படத்திற்கு பிறகு துப்பறிவாளன் 2 படத்தை மிஷ்கின் இயக்கி வந்தார்.

ஆனால் அந்த பட தயாரிப்பாளரும் நடிகருமான விஷாலுடன் ஏற்பட்ட மோதலால் அப்படத்திலிருந்து விலகினார்.

இதனையடுத்து தனது அடுத்த படம் தொடர்பான அறிவிப்பை வருகிற 20ம் தேதி அவரின் பிறந்தநாளில் வெளியிடுவதாக தெரிவித்தார் மிஷ்கின்.

தன் அடுத்த படமாக ‘பிசாசு 2′ படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆண்ட்ரியா நாயகியாக நடிக்க கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.

பெரும்பாலும் மிஷ்கின் படங்களுக்கு இளையராஜா தான் இசையமைப்பார்.

ஆனாலும் இளையராஜாவின் மூத்த மகன்தான் கார்த்திக் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

Mysskins Pisasu 2 cast and crew details

மூலக்கதை