மது மற்றும் இலவசங்களால் சோம்பேறியான தமிழர்கள்.. ; நீதிபதி கருத்து

FILMI STREET  FILMI STREET
மது மற்றும் இலவசங்களால் சோம்பேறியான தமிழர்கள்.. ; நீதிபதி கருத்து

கடந்த மே மாதம் 16 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அவர்கள்… “புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் இறப்பு எண்ணிக்கை குறித்த விவரங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு இருந்தார்.

இது தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இதில் ஆஜரான கூடுதல் வழக்கறிஞர் சங்கர நாரயணன் வழக்கு குறித்தான விவரங்களை சமர்பிக்க கூடுதலாக இரண்டு வாரங்கள் கால அவகாசம் வேண்டும் எனத் தெரிவித்தார்.

அப்போது பேசிய நீதிபதி…

“மத்திய அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இறப்பு மற்றும் வேலை இழப்பு குறித்த விவரங்கள் இல்லை என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாநில அரசுகளிடம் இருந்தும் தகவல்களைப் பெற்று மத்திய அரசு அந்த விவரங்கறை கூறியிருக்க வேண்டாமா? என்றார்.

இதன்பின்னர் பேசிய வழக்கறிஞர்…

“தமிழ்நாட்டில் பணியாற்றும் தொழிலாளர்களில் 52 சதவிகிதத்தினர் வெளிமாநிலத்தவர்கள் தான்.

தஞ்சாவூர் பகுதிகளில், விவசாயப் பணிகளில் ஏராளமான மேற்கு வங்க மாநில பெண்கள் தான் ஈடுபட்டு வருகின்றனர்” என்றார்.

இதனைதொடர்ந்து மீண்டும் பேசிய நீதிபதி, “தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் மது மற்றும் இலவசங்களால் சோம்பேறிகளாக உள்ளனர். என தெரிவித்தார்.

Data on migrant worker deaths Madras High Court questions Central govt

மூலக்கதை