சீனாவின் கோரப்பிடியில் ஹாங்காங்: நாட்டை விட்டு வெளியேறும் மக்கள்

தினமலர்  தினமலர்
சீனாவின் கோரப்பிடியில் ஹாங்காங்: நாட்டை விட்டு வெளியேறும் மக்கள்

ஹாங்காங்: சீனா தன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஹாங்காங்கில் அமல்படுத்தி, தனது இரும்புக்கரம் கொண்டு அங்குள்ளவர்களை ஒடுக்க முயற்சிக்கிறது. இதனால், ஹாங்காங் - சீனா மோதல் வலுத்துள்ளது. முன்னறிவிப்பின்றி சீனாவுக்கு எதிராகப் போராடும் சமூக ஆர்வலர்கள் சீன போலீசாரால் கைது செய்யப்படுகின்றனர். உலக நாடுகள் பல சீனாவின் இந்த அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.



சீன கம்யூனிச அரசின்கீழ் வாழப் பிடிக்காத பலர் ஹாங்காங்கை விட்டு தற்போது வெளியேற நினைக்கின்றனர். ஹாங்காங்வாசிகள் பிரிட்டனில் குடியேற பிரிட்டன் அரசு தங்கள் சட்டத்தை எளிதாக்கி உள்ளது. நடுத்தர மற்றும் மேல் நடுத்தர வர்க்க மக்கள் பலர் முறையாக பாஸ்போர்ட் எடுத்து வேலைக்கு விண்ணப்பித்து பிரிட்டன் செல்ல ஆயத்தம் ஆகின்றனர். ஏழைத் தொழிலாளிகள் பலர், சீன கம்யூனிச அரசு அடக்குமுறை பிடிக்காமல் ஹாங்காங்கை சுற்றியுள்ள தென் சீன கடலில் படகு மூலம் தப்பி அண்டை நாடுகளுக்கு செல்ல முற்படுகின்றனர். இந்த தகவல் உலகம் முழுக்க அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் ஆஹா சி யூன் என்ற ஹாங்காங் சமூக ஆர்வலர் ஒருவர் சீன அரசின் அடக்குமுறைக்கு பயந்து கடல் வழியாக தப்பிச்செல்ல முயன்றுள்ளார். இவர் ஏற்கனவே சீன கப்பல் படையால் மூன்றுமுறை எல்லை தாண்ட முயன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் தன்னுடைய அனுபவம் குறித்து கூறுகையில், 'தற்போது சீன அரசின் கோரப்பிடியில் ஹாங்காங் உள்ளது. இங்கு வாழ்வதற்கு தப்பிச் செல்வது எவ்வளவோ மேல்' என்றார்.

மூலக்கதை