அனபெல் சுப்பிரமணியம்: விஜய் சேதுபதி பட தலைப்பு

தினமலர்  தினமலர்
அனபெல் சுப்பிரமணியம்: விஜய் சேதுபதி பட தலைப்பு

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இதில் டாப்ஸி ஹீரோயின். இதன் படப்பிடிப்புகள் தற்போது ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது.

ராதிகா, தேவதர்ஷினி, பிக்பாஸ் மதுமிதா, சுரேகாவாணி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி இருவரும் இரு வேடங்களில் நடிக்கிறார்கள் என்ற தகவல் கசிந்துள்ளது. இந்த படத்தற்கு அனபெல் சுப்பிரமணியம் என்று டைட்டில் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. காஞ்சுரிங் என்ற ஹாலிவுட் பேய் படங்களில் வரும் கதாபாத்திரத்தின் பெயர்தான் அனபெல் என்பதாகும்.

படத்தில் முன் ஜென்மம் குறித்த பிளாஷ்பேக் காட்சிகள் இருக்கிறதாம் அதிலும் விஜய் சேதுபதி, டாப்ஸி நடித்திருப்பதால் இருவருக்கும் இரண்டு வேடம் என்கிறார்கள். இது ஹாரர் காமெடி படம். அனபெல் என்பது டாப்ஸியின் பெயராகவும், சுப்பிரமணியம் என்பது விஜய் சேதுபதி பெயராகவும் இருக்கலாம். டைட்டில் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு ஒரு சில நாளில் வெளியாகலாம்.

மூலக்கதை