சாயிஷாவின் அசத்தல் நடனம் - செம லைக்ஸ்

தினமலர்  தினமலர்
சாயிஷாவின் அசத்தல் நடனம்  செம லைக்ஸ்

வனமகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. காப்பான், கஜினிகாந்த் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் ஆர்யாவை காதலித்து, திருமணம் செய்தவர், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். நடிப்பு மட்டுமின்றி, நடனத்திலும் அசாத்திய திறமை கொண்டவர். அவ்வப்போது சமூகவலைதளங்களில் பல்வேறு விதமான நடன அசைவுகளுடன் கூடிய வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இப்போது ஹிந்தி பாடல் ஒன்றுக்கு அசத்தலான நடனம் ஆடி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இது சமூகவலைதளங்களில் வைரலானது. இன்ஸ்டாகிராமில் மட்டும் 6.10 லட்சத்திற்கு மேலான லைக்ஸ்கள் கிடைத்தன.

When you're trying to get the choreography right after ages!

மூலக்கதை