முத்தப் புகைப்படத்தை 'பப்ளிக்' ஆக வெளியிட்ட ஸ்ரேயா சரண்

தினமலர்  தினமலர்
முத்தப் புகைப்படத்தை பப்ளிக் ஆக வெளியிட்ட ஸ்ரேயா சரண்

தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். தற்போது 'கமனம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு ரஷ்யாவைச் சேர்ந்த ஆன்ட்ரி கோஸ்சிவ் என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார்.

ஒரு வாரத்திற்கு முன்னதாக தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார் ஸ்ரேயா. பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படங்களை நேற்றுதான் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதில் ஒரு படத்தில் காதல் கணவருக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்ட புகைப்படத்தையும் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

பொதுவாக இந்திய நடிகைகள் கிளாமரான புகைப்படங்களை மட்டுமே அவர்களது சமூக வலைத்தளங்களில் வெளியிடுவார்கள். வெளிநாட்டுக் கணவர் என்பதால் இப்படி முத்தப் புகைப்படங்களை வெளியிடுவதில் அவர்கள் எந்த வெட்கமும்படவில்லை போலிருக்கிறது.

மூலக்கதை