விக்னேஷ் சிவன் பிறந்தநாள், பார்ட்டி வைத்த நயன்தாரா

தினமலர்  தினமலர்
விக்னேஷ் சிவன் பிறந்தநாள், பார்ட்டி வைத்த நயன்தாரா

தென்னிந்தியத் திரையுலகின் பரபரப்பான காதல் ஜோடி நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன். சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார் விக்னேஷ் சிவன்.

விக்னேஷ், நயன்தாரா மற்றும் இருவரின் அம்மா ஆகியோர் தற்போது கோவாவில் ஓய்வெடுத்து வருகின்றனர். அங்கு ஹோட்டலில் தனது காதலன் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாட முடிவெடுத்தார் நயன்தாரா.

அதனால், தனிப்பட்ட பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்தார். இசை நிகழ்ச்சி, கேக் வெட்டல் என காதலர்கள் தனிமையில் அவர்களது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார்கள். அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தத்திலும் பகிர்ந்துள்ளார்கள்.

கொரோனா ஊரடங்கு இல்லாமல் இருந்திருந்தால் அந்த பிறந்தநாள் கொண்டாட்டம் நண்பர்களுடன் சென்னையில் அமர்க்களப்பட்டிருக்கும்.

விக்னேஷ் சிவன் அடுத்து விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்க உள்ளார்.


❤️Wikki❤️Birthday Celebrations

மூலக்கதை