சைலன்ஸ் படத்தின் கதை இதுதான்

தினமலர்  தினமலர்
சைலன்ஸ் படத்தின் கதை இதுதான்

அனுஷ்கா, மாதவன், அஞ்சலி நடித்துள்ள தெலுங்கு படமான நிசப்தம், தமிழ் மற்றும் மலையாளத்தில் சைலென்ஸ் என்ற பெயரில் வருகிற 2ந் தேதி ஓடிடி தளத்தில் வெளிவருகிறது.

படத்தின் கதை குறித்து வெளியீட்டு நிறுவனமான அமேசான் ப்ரைம் டைம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத திறைமையான ஓவிய கலைஞரான சாக்ஷி (அனுஷ்கா), எதிர்பாராத விதமாக பேய் இருப்பதாக நம்பப்படும் வில்லாவில் நிகழும் மோசமான சம்பவத்தை பார்த்ததால் அதன் குற்றவியல் விசாரணையில் சிக்கிக் கொள்கிறாள்.

துப்பறியும் போலீஸ் குழுவினர் இந்த வழக்கை முழுவதுமாக ஆராய்ந்து பேய் முதல் காணாமல் போன இளம்பெண் வரையிலான சந்தேக நபர்களின் பட்டியலை தாயார் செய்கின்றனர். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை. கடைசி வரை யூகிக்க முடியாத இருக்கையின் நுணிக்கே வரைவழைக்கும் த்ரில்லர் படமாக சைலன்ஸ் இருக்கும். அமெரிக்காவில் பரவலாக படமாக்கப்பட்டது, இந்த கதை உலகளாவிய பார்வையாளர்களையும் தொடர்புபடுத்தும் விதமாக இருக்கும்.

இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை