பொன்விழா படங்கள்: விளையாட்டு பிள்ளை

தினமலர்  தினமலர்
பொன்விழா படங்கள்: விளையாட்டு பிள்ளை

தமிழ் சினிமாவின் முக்கியமான படமான தில்லானா மோகனாம்பாள் படத்தின் கதை வசனத்தை எழுதிய கொத்தமங்கலம் சுப்பு, முன்னணி வார இதழில் எழுதிய ராவ்பகதூர் சிங்காரம் என்ற நாவலே விளையாட்டு பிள்ளை என்ற பெயரில் திரைப்படமானது.

இதனை அன்றைய பிரமாண்ட இயக்குனர் ஏ.பி.நாகராஜன் இயக்கினார். சிவாஜி, பத்மினி, காஞ்சனா, மனோரமா, குமாரி ருக்மணி, சிவகுமார், பேபி ரோஜாமணி, ஜி.சகுந்தலா உள்பட பலர் நடித்தார்கள்.

ஏழை விவசாயி இளைஞனுக்கும் ஜமீன் குடும்பத்து பெண்ணுக்குமான காதல் கதை. சொத்துக்கள் கைவிட்டுப் போகும் என்று காதலை மறுக்கும் ஜமீன் குடும்பத்திலிருந்து விலகி வரும் காதல் ஜோடிகள் எளிய வாழ்க்கை வாழ்வார்கள். பின்னர் அவர்கள் எப்படி மீண்டும் ஜமீன் அரண்மணைக்குள் செல்கிறார்கள் என்பதுதான் கதை.

பெரும்பகுதி படப்படிப்புகள் மைசூர் அரண்மணையில் நடத்தப்பட்டது. படம் வெளியாகி 100 நாள் வரை ஓடி வெற்றி கண்டது. இந்த படத்திற்கான திரைக்கதையை எஸ்.எஸ்.வாசன் எழுதியிருந்தார். படம் வெளிவருவதற்குள் அவர் மரணம் அடைந்து விட்டதால், படத்தை அவருக்கு சமர்ப்பணம் செய்திருந்தனர்.

மூலக்கதை