விளைபொருள் கெடாமல் இருக்க உதவும் ‘ஸ்டார்ட் அப்’

தினமலர்  தினமலர்
விளைபொருள் கெடாமல் இருக்க உதவும் ‘ஸ்டார்ட் அப்’

பீகாரை சேர்ந்த ‘சாப்த் கிருஷி சயின்டிபிக்’ என்ற கம்பெனி, விவசாயிகளின் விளைபொருட்களை, குறிப்பாக, காய்கறிகளை குறைந்தபட்ச நாட்கள் கெடாமல் வைத்திருக்க உதவும் ஒரு குளிர்சாதனப் பெட்டியை கண்டுபிடித்திருக்கிறது.இது, ‘சப்ஜி கோதி’ என்றழைக்கப்படுகிறது. குறைந்த விலையில் உருவாக்கப்பட்ட சேமிப்பு மற்றும் போக்குவரத்துக்கான ஒரு தீர்வு.

தோட்டக்கலை விளைபொருளை, 10 முதல், 40 நாட்கள் வரையில் சேமிக்க பயன்படுத்தலாம். இந்த கருவியை இயக்குவதற்கு, தினமும் ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் ஆன்-கிரிட் அல்லது ஆப்-கிரிட், 20 வாட் மின்சாரம் மட்டுமே தேவைப்படுகிறது. 200 கிலோ வரை கொள்ளளவு வரை சேமிக்க, ஏறத்தாழ, 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும். பழங்கள் மற்றும் காய்கறிகளின் ஆயுளை நீட்டிக்க குளிரூட்டல் அல்லது ரசாயனம் தேவையில்லை. தோட்டக்கலை பொருட்களின் அழிந்துபோகும் பிரச்னையை, ‘சப்ஜி கோதி’ தீர்த்து வைக்கிறது. விவசாயிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு மலிவு தொழில்நுட்பத்தை நேரடியாக வழங்குவதன் வாயிலாக, கழிவுகளை குறைப்பதில், ‘சப்ஜி கோதி’ பெரிய பங்காற்றுகிறது.
இ–மெயில் முகவரி: [email protected]
மீன் உற்பத்தி, ஏற்றுமதிமக்களின் வருமானம் அதிகரிக்கும் அதே நேரத்தில், உணவு பழக்க வழக்கங்களும் மாறி வருகின்றன. மக்கள் அதிக புரோட்டின் சேர்ந்த உணவு வகைகளை எடுத்து கொள்ள விரும்புகின்றனர். 1960ம் ஆண்டை வைத்து பார்க்கும் போது, தற்போது உலகளவில், மீன் உணவு சாப்பிடுவது இருமடங்காக உயர்ந்து விட்டது.இந்தியாவில் இருந்து, 50க்கும் மேலான மீன் வகைகள், 75 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேற்கு வங்கம், ஆந்திரா, குஜராத், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள், மீன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி வகிக்கின்றன. இந்தியாவை சுற்றியுள்ள, 7,500 கி.மீ., கடற்கரைகள், மீன் உற்பத்திக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.
– சேதுராமன் சாத்தப்பன் –
சந்தேகங்களுக்கு: [email protected],
மொபைல் எண்: 98204 51259.

மூலக்கதை