நாங்க நிறைவேற்றியே தீருவோம்: பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே மாநிலங்களவையில் விவசாய மசோதாக்களை தாக்கல் செய்தார் மத்திய வேளாண் அமைச்சர் தோமர்

தினகரன்  தினகரன்
நாங்க நிறைவேற்றியே தீருவோம்: பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே மாநிலங்களவையில் விவசாய மசோதாக்களை தாக்கல் செய்தார் மத்திய வேளாண் அமைச்சர் தோமர்

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இதில் 11 மசோதாக்களை நிறைவேற்ற ஆளும் பாஜ அரசு திட்டமிட்டிருந்தது. இதில் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை முதல் நாளே தாக்கல் செய்யப்பட்டது. இவற்றில் இரண்டு மசோதாக்கள் கடந்த 17ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.இதனையடுத்து, விவசாய  மசோதாக்கள் மாநிலங்களவையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார். முன்னதாக, மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ கூட்டணியில் நீண்ட காலமாக இடம் பெற்றுள்ள சிரோமணி அகாலி தளம் கட்சியன் சார்பில் மத்திய அமைச்சராக இருந்த உணவு பதனிடும் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே, மாநிலங்களையில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து, காரசார விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இருப்பினும், மசோதாக்களுக்கு அதிமுக ஆதரவு அளிப்பதால், மாநிலங்களவையிலும் இவை அதிக சிக்கலின்றி நிறைவேறுவது உறுதியாகி இருக்கிறது.இருப்பினும், மாநிலங்களவை பாஜக எம்பிக்கள் அனைவரும் இன்று அவைக்கு கட்டாயம் வர வேண்டும் என அக்கட்சி கொறடா உத்தரவிட்டுள்ளார். எப்படியாவது விவசாயம் தொடர்பான 3 மசோதாக்கள் மாநிலங்களவையில் இன்று  நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய பாஜக அரசு தீவிரமாக உள்ளது. இதனால், பாஜக எம்.பி.க்கள் கட்டாயம் அவைக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

மூலக்கதை