நேபாளத்திற்கு இரு ரயில்கள் ஒப்படைத்த இந்தியா

தினமலர்  தினமலர்
நேபாளத்திற்கு இரு ரயில்கள் ஒப்படைத்த இந்தியா

காத்மாண்டு: நேபாள நாட்டிற்கு, இரு அதிநவீன ரயில்களை, இந்தியா வழங்கியுள்ளது.

சென்னை, பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த நவீன 'மீட்டர் கேஜ்' ரயில்களை, கொங்கன் ரயில்வே, நேற்று முன்தினம், நேபாள ரயில்வேயிடம் ஒப்படைத்தது. சோதனை ஓட்டமாக, முதல் ரயில், பீஹாரின் ஜெயநகரில் இருந்து 35 கி.மீ., துாரத்தில் உள்ள, நேபாளத்தின் குர்தா ரயில் நிலையம் சென்றது. ''தற்போது கொரோனாவால் நேபாள எல்லைகள் மூடப்பட்டுள்ளன. அதனால், ஜெயநகர்-குர்தா ரயில் போக்குவரத்து, டிசம்பரில், ராமர் - சீதை திருமண விழாவையொட்டி துவங்கும்,'' என, நேபாள ரயில்வே கம்பெனி பொறியாளர், பினோத் ஓஜா தெரிவித்தார்.

மூலக்கதை