ராஜஸ்தான் வீரர்களுக்கு ‘நெகடிவ்’ | செப்டம்பர் 19, 2020

தினமலர்  தினமலர்
ராஜஸ்தான் வீரர்களுக்கு ‘நெகடிவ்’ | செப்டம்பர் 19, 2020

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடக்கும் 13வது ஐ.பி.எல்., சீசனில் பங்கேற்க ஆஸ்திரேலியா, இங்கிலாந்தை சேர்ந்த 21 வீரர்கள் சமீபத்தில் துபாய் வந்தனர். ஓட்டலில் 36 மணி நேரம் தனிமைப்படுத்தப்பட்ட இவர்களுக்கு ஐ.பி.எல்., வழிகாட்டுதலின்படி 2 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ராஜஸ்தான் அணியை சேர்ந்த ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர், ஜாஸ் பட்லருக்கு ‘நெகடிவ்’ என்று முடிவு வந்தது.  இவர்கள், வரும் 22ல் சார்ஜாவில் நடக்கவுள்ள சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாட தகுதி பெற்றனர்.

சமீபத்தில் மான்செஸ்டரில் நடந்த வலைப்பயிற்சியின் போது பந்து தலையில் தாக்கியதால் இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிக்கும் ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்யப்படவில்லை. இவர், ஆஸ்திரேலியா, ராஜஸ்தான் அணிகளின் மருத்துவ குழுவிடம் மூளை அதிர்ச்சி சோதனையில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே முதல் போட்டியில் விளையாட அனுமதிக்கப்படுவார். ஒருவேளை இவர் விளையாடவில்லை என்றால் ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக பட்லர் செயல்படுவார்.

மூலக்கதை