முதன்முறை... | செப்டம்பர் 19, 2020

தினமலர்  தினமலர்
முதன்முறை... | செப்டம்பர் 19, 2020

ஐ.பி.எல்., தொடரில் முதன்முறையாக அரங்கேறியவை:

* முதல் ‘டாஸ்’ வென்றார்  சென்னை கேப்டன் தோனி.

* முதல் பந்தை சென்னை வேகப்பந்துவீச்சாளர் தீபக் சகார் வீசினார். இவர், 3வது முறையாக (2018, 19, 20) தொடரின் முதல் பந்தை வீசினார். 

* முதல் பந்தை மும்பை கேப்டன் ரோகித் சர்மா சந்தித்தார்.

* முதல் பவுண்டரி ரோகித் அடித்தார்.

* முதல் விக்கெட்டை சென்னை ‘சுழல்’ வீரர் பியுஸ் சாவ்லா கைப்பற்றினார்.

* முதலில் ரோகித் அவுட்டானார்.

* முதல் சிக்சரை மும்பையின் சவுரப் திவாரி அடித்தார்.

 

இம்முறை துவக்க விழா நடத்தப்படவில்லை. எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு தலைவர் ஷேக், தொடரை முறைப்படி துவக்கி வைத்தார். பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி, செயலர் ஜெய் ஷா உடன் இருந்தனர்.

 

மும்பை அணியில் ஹர்திக், குர்னால் பாண்ட்யா சகோதரர்கள் இடம் பெற்றிருந்தனர். சென்னை அணிக்காக தீபக் சகார் பங்கேற்றார். இவரது சகோதரர் ராகுல் சகார் மும்பை அணி சார்பில் களமிறங்கினார்.

மூலக்கதை