மயக்கும் கிரா, சஞ்சனா | செப்டம்பர் 19, 2020

தினமலர்  தினமலர்
மயக்கும் கிரா, சஞ்சனா | செப்டம்பர் 19, 2020

 அபுதாபி: ஐ.பி.எல்., தொடரின் தொகுப்பாளினிகளாக கிரா, நெரோலி, தான்யா, சஞ்சனா மயக்க உள்ளனர்.

ஐ.பி.எல்., தொடரின் போட்டித் தொகுப்பாளர்களில் பிரபலம் வாய்ந்தவர் மயாந்தி லாங்கர். இந்திய கிரிகெட் வீரர் ஸ்டூவர்ட் பின்னியின் மனைவி. சமீபத்தில் மயாந்திக்கு ஆண்குழந்தை பிறந்தது. இதனால் எமிரேட்ஸ் வரவில்லை.

இதையடுத்து ஸ்டார் நிறுவனம் 12 பேர் கொண்ட புதிய பட்டியலை வெளியிட்டது. இதில் கிரா நாராயணன், நெரோலி மியாடோஸ், தான்யா, நஸ்பிரீத் கவுர், சஞ்சனா போட்டிகளை தொகுத்து வழங்க உள்ளனர்.

இதில் கிரா 26, சென்னையை சேர்ந்தவர். இவருக்கு டென்னிஸ், நடனம், இசை பிடிக்கும். லண்டன் பல்கலை.,யில் சைக்காலாஜி படித்தவர். 2018ல் வெளியான கூத்தன் தமிழ் படத்தில் நடித்துள்ளார். புரோ கபடி தொடரில் தொகுப்பாளினியாக கால் எடுத்து வைத்து, தற்போது கிரிக்கெட்டுக்கு வந்துள்ளார்.

கிரிக்கெட், பாட்மின்டன், கால்பந்து தொடர்களில் தொகுப்பாளினியாக மாடல் அழகி சஞ்சனா பணியாற்றியுள்ளார். 2019 உலக கோப்பை தொடரில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. தவிர நடிகை தான்யா ஆஸ்திரேலிய ‘டிவி’யை சேர்ந்த நெரோலியும் உள்ளனர்.

மூலக்கதை