ஆப்கனில் விமானப்படை தாக்குதல்: 30 பேர் பலி

தினமலர்  தினமலர்
ஆப்கனில் விமானப்படை தாக்குதல்: 30 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி பொது மக்கள் 30 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானின் குந்தூஸ் மாகாணத்தின் கனாபாத் மாவட்டத்தில் ஒரு விமானப்படை தாக்குதல் நடந்தது. அப்போது, அந்த பகுதியில் பொது மக்கள் கூடியிருந்தனர். இதனால், தாக்குதலில் 30 பேர் உயிரிழந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார்.


மற்றொருவர் கூறுகையில், விமான படை தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 அப்பாவிகள் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்துள்ளனர். 7 தலிபான் பயங்கரவாதிகளும் உயிரிழந்த நிலையில் 2 பேர் காயமடைந்தனர் என்றார்.

கனாபாத் மாவட்ட தலைவரும், விமானப்படை தாக்குதலை உறுதிபடுத்தியுள்ளார். ஆனால், இந்த தாக்குதலை யார் நடத்தியது உள்ளிட்ட தகவல்களை தெரிவிக்க மறுத்துவிட்டார்.

மூலக்கதை