அமெரிக்காவில் காந்தி சிலையை உடைக்க முயற்சி; டிரம்ப் கண்டனம்

தினமலர்  தினமலர்
அமெரிக்காவில் காந்தி சிலையை உடைக்க முயற்சி; டிரம்ப் கண்டனம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜார்ஜ் புளாயிட் படுகொலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனை அடுத்து பிளாக் லைப் மேட்டர்ஸ் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்கள் தொடர்ந்து நூறு நாட்களுக்கும் மேலாக சில இடங்களில் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர்ப் புகை மற்றும் துப்பாக்கியைப் பயன்படுத்தினர். தற்போது அமெரிக்காவின் சில மாகாணங்களில் அவ்வபோது இந்த போராட்டக்காரர்கள் இன்னும் ஓயாமல் போராடிய வண்ணமே உள்ளனர். அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசியில் உள்ள இந்திய தூதரகத்தின் அருகே மகாத்மா காந்தியின் சிலை உள்ளது.

இந்த போராட்டக்காரர்கள் சிலர் இந்த சிலையை தற்போது அடித்த சாய்த்து உள்ளனர். இந்த சிலையை பின்னர் இந்திய தூதரக அதிகாரிகள் நிமிர்த்தி வைத்துள்ளனர். டிரம்ப் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைதி வழியை போதித்த மகாத்மா காந்தியின் சிலையை போராட்டக்காரர்கள் என்ற போர்வையில் உள்ள இந்த திருடர்கள் உடைக்க முயன்றுள்ளனர். இவர்கள் அடுத்தடுத்து ஜார்ஜ் வாஷிங்டன், ஜெபர்சன் ஆகிய தலைவர்களின் சிலையை உடைக்கவும் தயங்க மாட்டார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை