இந்தியாவில் பிரபலமாகும் மற்றொரு சீன செயலி 'ஸ்நாக் வீடியோ' : டிக் டாக் தடை செய்யப்பட நிலையில், அதிகளவில் பதிவிறக்கம்!!

தினகரன்  தினகரன்
இந்தியாவில் பிரபலமாகும் மற்றொரு சீன செயலி ஸ்நாக் வீடியோ : டிக் டாக் தடை செய்யப்பட நிலையில், அதிகளவில் பதிவிறக்கம்!!

டெல்லி : இந்தியாவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்ட நிலையில், சீனாவின் மற்றொரு செயலியான ஸ்நாக் வீடியோ செயலி பிரபலமாகி வருகிறது. இந்தியாவின் பிரபலமாக குறுகிய வீடியோ பதிவு செயலியான டிக் டாக் உட்பட 59 சீன பயன்பாடுகளை மத்திய அரசு தடை செய்தது. டிக் டாக் தடை செய்யப்பட்ட பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக இது போன்ற போட்டி செயலிகளின் பயன்பாடுகள் சந்தைக்கு வந்து கொண்டே உள்ளன. அதன் அடிப்படையில், தற்போது ஸ்நேக் வீடியோ என்ற சீன செயலி ஒன்று இந்தியாவில் அதிகளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது. இம்மாதத் தொடக்கத்தில் இருந்து 15ம் தேதி வரை ஒரு கோடியே 80 லட்சம் பேர் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். ஸ்நாக் வீடியோ செயலியின் அலுவலகம் சிங்கப்பூரில் இருந்து செயல்பட்டாலும் இதனை தயாரிப்பது எனவோ சீனாவைச் சேர்ந்த குவஷியோ டெக்னோலஜி என்ற நிறுவனம் தான். சிங்கப்பூரில் இருந்து செயல்பட்டு வருவதால் இந்தியாவில் தடை உத்தரவில் இல்லாத இந்த செயலி, இந்தியாவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதே போல் எம்எக்ஸ் பிளேயர் இந்தியாவில் டிக் டாக்கை போன்ற பயன்பாட்டை டகா டக் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்நாக் வீடியோ செயலிக்கு அடுத்தப்படியாக டகா டக் என்ற செயலி பதிவிறக்கம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை