மெரினாவுக்கு வராதீர்! போலீஸ் வேண்டுகோள்

தினமலர்  தினமலர்
மெரினாவுக்கு வராதீர்! போலீஸ் வேண்டுகோள்

மெரினா : 'மெரினா உள்ளிட்ட கடற்கரைக்கு செல்ல தடை நீடிப்பதால், யாரும் வர வேண்டாம்' என, காவல் துறையினர், வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மார்ச் முதல் ஊரடங்கு உள்ளது. அவ்வப்போது, பல கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.செப்., 1ம் தேதி முதல், நிபந்தனைகளுடன், கோவில், பஸ் போக்கு வரத்து துவங்கிய நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்த முழு ஊரடங்கையும் அரசு தளர்த்தியது.

ஆனால், சென்னையில், மெரினா கடற்கரை உட்பட சுற்றுலா தலங்களில், மக்கள் கூடினால் நோய் தொற்று பரவும் அபாயம் நிலவுவதால், தடையை அரசு நீட்டித்துள்ளது.இதனால், கடற்கரையில் நடைபயிற்சி செய்ய, பொழுதுபோக்க வரும் மக்களுக்கு, அனுமதி மறுக்கப்படுகிறது.

இது குறித்து, காவல்துறை மற்றும் மாநகராட்சி சார்பில், 'கடற்கரை மணற்பரப்பிற்கு செல்ல தடை நீடிப்பதால், யாரும் செல்லக் கூடாது' என, ஆங்காங்கே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதுடன், ஒலிபெருக்கி வாயிலாகவும் அறிவிப்பு செய்யப்படுகிறது.தடையை மீறி வருபவர்கள் மீது, காவல்துறை, மாநகராட்சியினர் இணைந்து பாரபட்சம் இன்றி, 200 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர்.

மூலக்கதை