கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் இன்றிரவு ஐபிஎல் கோலாகல தொடக்கம்; சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் மோதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் இன்றிரவு ஐபிஎல் கோலாகல தொடக்கம்; சென்னை சூப்பர் கிங்ஸ்  மும்பை இந்தியன்ஸ் மோதல்

அபுதாபி: அபுதாபியில் இன்றிரவு ஐபிஎல் கோலாகலமாக தொடங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 13வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி நவ. 10ம் தேதி வரை நடக்கிறது.

அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடக்கும் டி20 கிரிக்கெட் திருவிழாவில் மூன்று முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை வேண்டும்.

லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடக்க உள்ள இந்த போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.

அபிதாபியில் இன்று (செப். 19) நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இரவு 7. 30 மணிக்கு ேதானி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்சுடன் விளையாடுகிறது.

சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஓராண்டுக்கு பிறகு கிரிக்கெட்டில் களம் திரும்புவது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா இடம் பெறாததால், தோனி எத்தனையாவது வீரராக களம் காண்பார் என்பது பற்றிய விவாதங்களும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகின்றன.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் தொடங்க வேண்டிய ஐபிஎல் தொடர் பல மாதங்களுக்குப் பிறகு வெளிநாட்டு மைதானங்களில் தற்போது நடைபெற உள்ளது.

.

மூலக்கதை