விக்கெட் ‘வேட்டைக்காரன்’ | செப்டம்பர் 18, 2020

தினமலர்  தினமலர்
விக்கெட் ‘வேட்டைக்காரன்’ | செப்டம்பர் 18, 2020

அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்களுக்கான வரிசையில் மும்பை அணியின் லசித் மலிங்கா (170 விக்கெட், 122 போட்டி) முதலிடத்தில் உள்ளார். அடுத்த 4 இடங்களில் டில்லியின் அமித் மிஸ்ரா (157 விக்கெட்), சென்னையின் ஹர்பஜன் சிங் (150), பியுஸ் சாவ்லா (150), டுவைன் பிராவோ (147) உள்ளனர்.

ஐ.பி.எல்., தொடரில் ஒரு இன்னிங்சில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த பவுலர்கள் பட்டியலில் அல்சாரி ஜோசப் முதலிடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு மும்பை அணிக்காக விளையாடிய இவர், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 3.4 ஓவரில் 12 ரன் மட்டும் வழங்கி, 6 விக்கெட் சாய்த்தார்.

இவரை அடுத்து ராஜஸ்தான் அணியின் சோகைல் தன்வீர் (6 விக்கெட், 4 ஓவர், 14 ரன், எதிர்: சென்னை, 2008), புனே அணியின் ஆடம் ஜாம்பா (6 விக்கெட், 4 ஓவர், 19 ரன், எதிர்: ஹைதராபாத், 2016) உள்ளனர்.

மூலக்கதை