‘ரன் மெஷின்’ | செப்டம்பர் 18, 2020

தினமலர்  தினமலர்
‘ரன் மெஷின்’ | செப்டம்பர் 18, 2020

அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி (5,412 ரன்கள், 177 போட்டி) முதலிடத்தில் உள்ளார். அடுத்த இரண்டு இடங்களில் சென்னையின் ரெய்னா (5,368 ரன்கள், 193 போட்டி), மும்பையின் ரோகித் (4,898 ரன்கள், 188 போட்டி) உள்ளனர். சென்னை அணி கேப்டன் தோனி (4432 ரன், 190 போட்டி) 7வது இடத்தில் உள்ளார்.

ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் கிறிஸ் கெய்ல் முன்னிலை வகிக்கிறார். கடந்த 2013ல் பெங்களூருவில் நடந்த புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணியின் கெய்ல், 66 பந்தில் 175 ரன்கள் (17 சிக்சர், 13 பவுண்டரி) எடுத்தார்.

 

அதிக ‘ஸ்டிரைக் ரேட்’ வைத்துள்ள பேட்ஸ்மேன்கள் வரிசையில் டில்லி, கோல்கட்டா அணிகளுக்காக விளையாடிய ஆன்ட்ரி ரசல் முன்னிலையில் உள்ளார். இவரது ‘ஸ்டிரைக்ரேட்’ 186.41 ஆக உள்ளது. இவரை அடுத்து பென் கட்டிங் (168.79), சுனில்  நரைன் (168.34), மொயீன் அலி (165.92), ரிஷாப் பன்ட் (162.69), மேக்ஸ்வெல் (161.13) ஆகியோர் அதிக ‘ஸ்டிரைக்ரேட்’ வைத்துள்ளனர்.

மூலக்கதை