தைவானை மிரட்ட போர் விமானங்களை பறக்கவிடும் சீனா

தினமலர்  தினமலர்
தைவானை மிரட்ட போர் விமானங்களை பறக்கவிடும் சீனா

தைபே: சீனாவின் கடல் பரப்பு அருகே உள்ள சிறிய தீவான தைவான், தொழில்நுட்ப மற்றும் பொருளாதார வளர்ச்சியில் உச்சம் பெற்ற நாடு. தைவானில் சீனா தனது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த முயன்று வருகிறது.



நவ., 3ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. சீனாவுடன் உச்சகட்ட கருத்து வேறுபாடு நிலவதால்அமெரிக்கா சீனாவுக்கு எதிரான நாடுகளுடன் நட்புறவை மேம்படுத்தி வருகிறது. கடந்த 15ம் தேதி அமெரிக்க பொருளாதார அமைச்சக அதிகாரி கெய்த் கிராட்ச் தைவான் தலைநகர் தைபேவுக்கு வருகை தந்தார். மூன்று நாள் அரசுமுறை பயணமாக தைவானுக்கு வந்த அவர், அமெரிக்க - தைவான் நட்புறவு மற்றும் பொருளாதார ஒப்பந்தங்கள் குறித்து விவாதித்தார்.


இதனால் ஆத்திரமடைந்த சீனா, தைவானை மிரட்ட, தைவான் அருகே தனது 18 போர் விமானங்களை பறக்க விட்டுள்ளது. மேலும், சீனாவையும் தைவானையும் பிரிக்கும் சிறிய கடல் எல்லை அருகே கப்பல் படையையும் அனுப்பியுள்ளது. இதையடுத்து தங்களது போர் விமானங்களை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் வைத்துள்ளது தைவான்.

மூலக்கதை