தகவலுக்கு ரூ.11 லட்சம் சன்மானம்

தினமலர்  தினமலர்

தகவலுக்கு ரூ.11 லட்சம் சன்மானம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில், 2012 செப்டம்பர் மாதம், இந்திய வம்சாவளியான பரேஷ்குமார் படேல் என்பவரை, மர்ம நபர்கள் சிலர், கடத்திக் கொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அந்த கொலையில் தொடர்புடையோர் குறித்து தகவல் கொடுக்கும் நபருக்கு, 11 லட்சம் ரூபாய், சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்திய வம்சாவளிக்கு ஆயுள் தண்டனை

லண்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டனின், லெய்செஸ்டர் நகரில், கடந்த, மார்ச் மாதம், இந்திய வம்சாவளியான பாவினி பிரவின், 21, என்பவரை, அவரது முன்னாள் கணவர் ஜிகுகுமார் சோர்த்தி, 28, கத்தியால் குத்தி கொலை செய்தார். இது, பிரிட்டன் குற்றவியல் நீதிமன்றத்தில், ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. இந்நிலையில், குற்றவாளி ஜிகுகுமார் சோர்த்திக்கு, நீதிமன்றம், ஆயுள் தண்டனை விதித்துஉள்ளது

.பாக்., டாக்டருக்கு உளவியல் பரிசோதனை

மினியாபொலிஸ்: அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில், முகமது மசூத் என்ற பாகிஸ்தானிய டாக்டர் ஒருவர், வெளிநாட்டில் இயங்கும் பயங்கரவாத அமைப்புக்கு, உதவி செய்ய முயற்சித்தது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த மார்ச் மாதம், அவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிமன்றத்தில், அவர் குழப்பத்துடன் பேசி வருவதால், அவருக்கு உளவியல் பரிசோதனை செய்ய, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை