ஸ்டாப் கோவிட் கொரோனா சோதனை கருவி; அமெரிக்கர்கள் வரவேற்பு

தினமலர்  தினமலர்
ஸ்டாப் கோவிட் கொரோனா சோதனை கருவி; அமெரிக்கர்கள் வரவேற்பு

கொரோனா தடுப்பு மருந்து சோதனை உலகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பலநாடுகள் கொரோனா தடுப்பு மருந்து சோதனை ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் மெசச்சுஸஸ்ட் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஸ்டாப் கோவிட் என்ற தடுப்பு மருந்து சோதனை கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இந்த சோதனைக் கருவி மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஒரு மணிநேரத்தில் தங்களைத் தாங்களே பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்த கருவியை அமெரிக்கா முழுவதும் அனைவரது வீட்டிற்கும் சென்று சேர்க்க வேண்டும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அன்றாடம் வெளியே சென்று வேலை செய்யும் குடிமக்கள் தாங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோமா என அறிந்துகொள்ள இந்த கருவி பயன்படும். மேலும் தினசரி இந்த கருவிமூலம் பரிசோதனை செய்து கொள்ளலாம். ஒருமணி நேரத்தில் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம் என அவர்கள் கூறியுள்ளனர். இந்த கருவியை மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், மருந்து கடைகள், பள்ளிகள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு இலவசமாக அரசு வழங்கலாம் என அவர்கள் கூறியுள்ளனர்.


இந்த சோதனைக் கருவி சோதனை செய்து கொள்வோரின் ரத்த மாதிரியில் உள்ள ஆர்.என்.ஏ-வை பரிசோதித்து இதன்மூலம் கொரோனா பாதிப்பு உள்ளதா என சோதனை செய்யப்படுகிறது.மேலும் பிற சோதனைக் கருவிகள்போல கைதேர்ந்த நோய் தடுப்பு வல்லுனர்கள் இந்த சோதனைக்கு தேவைஇல்லை. இந்த ஸ்டாப் கோவிட் சோதனைக் கருவி மூலம் 402 நோயாளிகளுக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 220 பேருக்கு கொரோனா தாக்கம் உள்ளது. 200 பேருக்கு தாக்கம் இல்லை என இந்த கருவி சரியாக கண்டுபிடித்துள்ளது.

இந்த சோதனை முடிவை அமெரிக்க நோய்த் தடுப்பு நிறுவனம் ஏற்கனவே அங்கீகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. நியூ இங்கிலாந்து மருத்துவ இதழில் இந்த ஸ்டாப் கோவிட் சோதனைக் கருவி குறித்து விரிவான கட்டுரை வெளிவந்துள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.


மூலக்கதை