டிரம்ப் மீது 'மாஜி' மாடல் அழகி குற்றச்சாட்டு

தினமலர்  தினமலர்
டிரம்ப் மீது மாஜி மாடல் அழகி குற்றச்சாட்டு

நியூயார்க்:அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் டிரம்ப் மீது 'மாஜி' மாடல் அழகி ஆமிடோரிஸ் 48 பாலியல் குற்றஞ்சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் தி கார்டியன் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டி:கடந்த 1997ல் நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. அங்கு வந்த டிரம்ப் என்னை 'வி.ஐ.பி. ' அறைக்கு அழைத்துச் சென்றார்.பின் திடீரென கட்டி அணைத்து என் தோளில் சாய்ந்து கழுத்தை நாவினால் வருடினார்.நான் அவரை தள்ளினேன். ஆனால் அவர் பிடி மேலும் இறுகியது.

அவரது கைகள் என் உடலின் அனைத்து பகுதிகளிலும் படர்ந்தன.அப்போது எனக்கு 24 வயது. டிரம்புக்கு 51 வயது. எனக்கு தற்போது இரு பெண்கள் உள்ளனர். அவர்களுக்கு முன்மாதிரியாக விளங்க உண்மையை இப்போது கூறுகிறேன்.இவ்வாறு அதில் டோரிஸ் கூறியிருக்கிறார்.

டிரம்ப் தன் வழக்கறிஞர்கள் மூலம் டோரிஸ் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். ஓராண்டுக்கு முன் டோரிஸ் அளித்த பேட்டியை தற்போது கார்டியன் பத்திரிகை வெளியிட்டுள்ளதில் உள்நோக்கம் உள்ளதாக டிரம்ப் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.கடந்த அதிபர் தேர்தலின் போதும் டிரம்ப் மீது ஏராளமானோர் பாலியல் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை