டிரம்ப் கூறுவதை நம்பாதீர்கள்! விஞ்ஞானிகள் கூறுவதை நம்புங்கள்: பிடென்

தினமலர்  தினமலர்
டிரம்ப் கூறுவதை நம்பாதீர்கள்! விஞ்ஞானிகள் கூறுவதை நம்புங்கள்: பிடென்

வாஷிங்டன்: கொரோனா தொடர்பான உண்மைகளை அறிய டிரம்ப் கூறுவதை நம்பாதீர்கள் விஞ்ஞானிகள் கூறுவதை நம்புங்கள் என்று ஜனநாயாக கட்சி அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடென் கூறியுள்ளார்.

2 நாட்களுக்கு முன் பென்சில்வேனியாவின் பிலடெல்பியா நகரில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அடுத்த சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி கிடைத்து விடும் அதன் பிறகு நாட்டில் கொரோனா மறைந்து போகும் என்று தெரிவித்தார்.


இந்நிலையில் அதே மாகாணத்தின் மூசிக் நகரில் நடந்த பிரசாரத்தில் பேசிய ஜோ பிடென், ‛ டிரம்பின் பேச்சை மறுக்கும் வகையில், கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு விரைவில் ஒப்புதல் கிடைத்தாலும் நாடு உடனடியாக இயல்பு நிலைக்கு திரும்பாது. டிரம்பின் கொரோனா குறித்த பேச்சை நம்பாதீர்கள். விஞ்ஞானிகள் பேசுவதை நம்புங்கள், நான் தேசிய தொற்று நோய் நிறுவன இயக்குனர் டாக்டர் பவ்சி சொல்வதை மட்டும் தான் நம்புகிறேன். அவர் கொரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்று சொன்னால், அவரை நம்புவேன். நான் ஊசியையும் போட்டுக் கொள்வேன். டிரம்ப் பேச்சை நம்பமாட்டேன்' இவ்வாறு பிடென் தெரிவித்தார்.

மூலக்கதை