சில்லரை விலை பணவீக்கம் ஆகஸ்டில் சற்றே சரிந்தது

தினமலர்  தினமலர்
சில்லரை விலை பணவீக்கம் ஆகஸ்டில் சற்றே சரிந்தது

புதுடில்லி:விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான, சில்லரை விலை பணவீக்கம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சற்றே குறைந்து உள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில், விவசாயத் தொழிலாளர்களுக்கான சில்லரை விலை பணவீக்கம், 6.32 சதவீதமாகவும்; கிராமப்புற தொழிலாளர்களுக்கானது, 6.28 சதவீதமாகவும் சற்று குறைந்துள்ளது.இதுவே, கடந்த ஆண்டு இதே மாதத்தில் முறையே, 6.39 சதவீதமாகவும், 6.23 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.


கடந்த ஆகஸ்ட் மாதத்தில், உணவுப் பொருட்கள் பணவீக்கம், விவசாயத் தொழிலாளர்களுக்கானது, 7.76 சதவீதமாகவும்; கிராமப்புற தொழிலாளர்களுக்கானது, 7.83 சதவீதமாகவும் உள்ளது. இதுவே, கடந்த ஆண்டு ஆகஸ்டில் முறையே, 7.27 சதவீதம், 6.98 சதவீதம் என இருந்தது. மாநிலங்களைப் பொறுத்தவரை, இந்த இரண்டு பிரிவினருக்கான ஆகஸ்ட் மாத சில்லரை விலை பணவீக்கம், மேற்கு வங்கத்தில் அதிகம் உயர்ந்துள்ளது.மிக குறைவாக கேரளாவில் உள்ளது.

மூலக்கதை